ஒரு குளமும் இரண்டு கிராமங்களும் - இந்த பிரச்சனை வாழ்வாதாரப் போராட்டம்


(எம்.எச்.எம்.நௌபல்) முகநூலில் இருந்து இணைய வாசகர்களுக்காக அபூ சம்ரி.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தற்போது வாகனேரி முள்ளிவட்டுவான் ஆமிலா மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பிரதியமைச்சர் அமீரலி அவர்கள் எங்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினையில் அரசியல் காரணங்களுக்காக தலையிட்டு தீர்வினை பெற்றுதரவில்லை குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது வாகனேரி குளத்தில் மீன் பிடிப்பதற்கு முள்ளிவட்டுவான் ஆமிலா மீனவர் சங்கத்தினை சேர்ந்த தமிழ், முஸ்லிம் மீனவர்களுக்கு மீன் பிடிப்பதற்கு தடைவிதித்து மீன்பிடி விரிவாக்கல் உத்தியோகத்தர் நெல்சன் என்பவர் இவர்களுடைய வள்ளங்கள் சகலதையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தும் கூட நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் மீன்பிடி வள்ளங்களை உரிய மீனவர்களிடத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் மேற்படி நெல்சன் என்பவர் நீதிமன்றத்தின் உத்தரவினை உதாசீனம் செய்து வள்ளங்களை இதுவரை உரியவர்களிடம் ஒப்படைக்காததால் குறிப்பிட்ட மீனவ குடும்பங்கள் அன்றாட ஒரு நேர உணவிற்கு கூட கஷ்டப்படுகின்ற சோகமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதியமைச்சர் அவர்களிடம் பல தடவைகள் முறையிட்டும் அவர் அதிலிருந்து தந்திரமாக நழுவி விடுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

அதற்கு பிரதான காரணம் ஓட்டமாவடி பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய கிருபா என்ற பிரதேச சபை உறுப்பினர் வாகனேரியை சேர்ந்த மட்டுமின்றி வாகனேரி குளத்தில் முள்ளிவட்டுவான் ஆமிலா மீனவ சங்கத்தினர் மீன்பிடிப்பதனை தடை செய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டவராகும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரதியமைச்சர் அவர்களினால் முள்ளிவட்டுவான் மீனவர்கள் வாகனேரி குளத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதியினை பெற்றுக்கொடுத்தால் கிருபா என்பவர் பிரதேச சபையில் தங்களுடைய கட்சிக்கு வழங்கும் ஆதரவினை விலக்கிக் கொள்ளக்கூடும் என்ற அச்சத்தினால் பிரதியமைச்சர் இதிலிருந்து நழுவிவிடுவதாகவும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மீனவ சங்கத்தின் முக்கிய உறுப்பினர் கருத்துச் சொன்னார்.

என்னவோ இந்த பிரச்சனை வாழ்வாதாரப் போராட்டம் இது சுமூகமாகவும் அவசரமாகவும் தீர்க்கப்படவேண்டும் மீன்பிடி எம்முடைய பிரதேசத்தில் மீன்பிடிக்கு பொறுப்பான அரசரே இருக்கும்போது தங்களுடைய பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு ஏழை மீனவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். சற்று கருணை செய்யுங்கள் அரசனே!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...