ஹஸ்பர் ஏ ஹலீம்
பெரும் வரவேற்புடன் வரவழைக்கப்பட்ட மாணவ மாணவிகளை வீதியின் பிரதான இரு மருங்கிலும் வைத்து வரவேற்றார்கள் வாகன பேரணியும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களைக் கொண்டு மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வரவழைத்தார்கள். இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,பிரதேச நகர சபை உள்ளூராட்சி உறுப்பினர்கள்,வலயக் கல்வி அதிகாரிகள்,ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.