Batticaloa Campus இல் தொழில்நுட்ப கற்கை நெறிகளை ஆரம்பிக்க SLT தலைவர் இணக்கம்

NEWS
0 minute read
0
Batticaloa Campus இல் தொழில்நுட்பக் கற்கை நெறிகள் ஆரம்பிப்பது சம்பந்தமாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமார சிறிசேனவுடன் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இதில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன , Batticaloa Campus தலைவரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். . 

இன்று வியாழக்கிழமை Batticaloa Campus க்கு விஜயம் செய்த டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேன, அங்குள்ள நவீன வசதிகள், தொழில்நுட்பக் கூடங்களை பார்வையிட்டார். பின்னர், டெலிகொம் நிறுவனத்துக்கும் - Batticaloa Campusக்கும் இடையில் புரிந்துணர்வுடன் telecommunication உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 இலங்கையில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பல்கலைக்கழகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் Batticaloa Campus  உடன் இணைந்து செயற்பட இதன்போது டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் இணக்கம் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 


To Top