தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Aug 30, 2018

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் 5வது சான்றிதழ் வழங்கும் விழா
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 06.45 மணியளவில் காத்தான்குடி தாருல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்தில் இடம்பெறவுள்ளது.

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும்,தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அலியார் ரியாழி தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவிலும், கௌரவிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மது நளீமி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இங்கு அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த  மாணவருக்கான சான்றிதழ் வழங்கல்,ஐ.எம்.எஸ். கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல்,இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தொடராக பணியாற்றும் ஆசிரியர்களை கௌரவித்தல்,இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் விஷேட சித்தி பெற்று இஸ்லாமிய கலா நிலையங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாராட்டு போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages