Aug 1, 2018

எல்லை நிர்ணயம் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி என்கிறார் ரி்ஷாட்



மாகணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பல முரண்பாடான விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களை இலங்கை சோனகர் என்று கணித்திருப்பதால் உள்வாங்கப்படவேண்டிய முஸ்லிம்களாகிய மலாயர், மேமன் என்போர் கனிப்புக்குள் உள்வாங்கப்படவில்லை. இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்தும் கருத்து தெரிவிக்கையில், “இனரீதியான கணக்கெடுப்பில் தமிழர்கள் இலங்கை தமிழர்கள், இந்தியர் தமிழர் என பிரித்துக்காட்டப்பட்டிருக்கின்றார்கள். அதே நேரம் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்கள் என்றோ கண்டிச் சிங்களவர் என்றோ பிரித்துக்காட்டபடவில்லை.தனி சிங்களவர் என்றே கணிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முஸ்லிம்களை இலங்கை சோனகர் என்று கணித்திருப்பதால் மலாயர்,  மேமன் முஸ்லிம்கள் உள்வாங்கப்படாமை ஒரு முரண்பாடான விடயமாகும்.

 கொழும்பு மாவட்டத்தில் இலங்கைச் சோனகர் 2,49,609 என்றும் இஸ்லாமியர் 2,74,087 என்றும் குறிப்பிடபட்டிருக்கும் நிலையில், மாவட்ட ரீமியான அங்கத்தவர்களுக்கான கனக்கெடுபின் போது 2,49,609 என்ற சனத்தொகையே உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 25,000தால் குறைத்துக்காட்டபட்டுள்ளது. மாகணசபை எல்லை நிர்ணய அறிக்கையின்படி எல்லா மாகணங்களிலும் இதே நிலையே காணப்படுகின்றது. இந்த புதிய மாகாண தேர்தல் தொகுதி முறைமையை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். அந்த எல்லை நிர்ணயம் தெளிவில்லாமல் இருக்கிறது. புதிய முறையிலான மாகாணசபை தேர்தலை சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் சில பெரும்பான்மைக் கட்சிகளும் எதிர்கின்றன.

மாகாணசபைத் தேர்தல் மேலும் காலம் தாழ்தப்படக்கூடாது. பழைய விகிதாசார முறையில் அவசரமாக தேர்தல் நடத்தபடவேண்டும். எமது நிலைப்பாட்டினை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் விளக்கியிருக்கிறோம் என்றார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network