BREAKING NEWS

Aug 28, 2018

இலங்கை முஸ்லம்களின் அடையாளம் பேராசிரியர் ஷாஹுல் ஹஸ்புல்லாஹ்முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர்
மெய்யியல் துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.

mufizal 77@gmail.com
உலகில் பிறந்த மனி­தர்கள் தாம் கற்ற கல்­வியை நாட்­டிற்கும், தனது சமூ­கத்­திற்கும் பிர­யோ­ச­னப்­ப­டுத்த வேண்­டு­மென்­பதே புத்­தி­ஜீ­விகள் தொடர்­பான சமூ­கத்தின்  எதிர்­பார்ப்­பாகும். அதனை சிறப்­பாக செய்­து­விட்டு நேற்று முன்­தினம் (25.08.2018) எம்மை விட்டுப் பிரிந்­தி­ருக்கும் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் ஷாஹுல் ஹஸ்­புல்லாஹ் பற்­றிய பதிவே இது.
பிறப்பும், கல்­வியும்,
ஹஸ்­புல்லாஹ் இலங்­கையின் வடக்கு  மன்னார் மாவட்­டத்தின் எருக்­க­லம்­பிட்டி பிர­தே­சத்தில் 03.09.1950 இல் பிறந்து, அப்­பி­ர­தேச பாட­சா­லை­களில் ஆரம்­பக்­கல்­வியைக் கற்று, பின்னர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது, BA(Hon's), MA போன்­ற­வற்றை புவி­யியல் துறையில் கற்று,  எருக்­க­லம்­பிட்­டியின் முத­லா­வது பட்­ட­தாரி என்ற பெரு­மை­யி­னையும் பெற்றார், பின்னர் British Columbia -Canada பல்­க­லைக்­க­ழ­கத்தில் MA, PhD, படிப்பை முடித்து, பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில், சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரா­கவும், பேரா­சி­ரி­ய­ரா­கவும், ஆய்­வா­ள­ரா­கவும் கடமை ஆற்­றினார்.
துறைசார் பங்­க­ளிப்பு
பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ், மானிடப் புவி­யியல், அர­சியல் புவி­யியல், குடி­பெ­யர்வு, உள்­நாட்டு இடம்­பெ­யர்வு போன்ற பல­து­றை­களில் சிறப்பு அறி­வைக்­கொண்­டவர். அது தொடர்­பான பல­வ­ருட கற்­பித்தல், ஆய்வு முயற்­சி­க­ளையும், பல உள்­நாட்டு, வெளி­நாட்டு மாண­வர்க­ளையும் தனது வழி­காட்­டலின் கீழ் வழிப்­ப­டுத்­தி­யவர். கற்­பித்­த­லிலும், பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­க­ளிலும் மிக்க ஆர்­வ­மு­டை­ய­வ­ரா­கவும் இருந்த அதே­வேளை, University of Zurich, Edinburgh, Norwegian, Columbia, Canada, போன்ற பல்­க­லைக்­க­ழ­கங்­களில், வரு­கை­தரு விரி­வு­ரை­யா­ள­ரா­கவும், Fulbright ஆய்­வா­ள­ரா­கவும், மர­ணிக்கும் வரை பணி­பு­ரிந்து வந்தார். இந்­த­வ­கையில் குறித்த துறையில் International Scholar ஆக பிர­கா­சித்­தவர்.
ஹஸ்­புல்லாஹ் ஆய்­வுத்­து­றையில் கொண்­டி­ருந்த திற­மையைப் போல, ஆங்­கி­லத்­திலும் அதிக புல­மை­மிக்­கவர், அதுவும்  அவரை உலக தரத்­திற்கு உயர்த்­திய கார­ணி­களில் ஒன்­றாகும். மிக எளி­மை­யான தன்மை உடை­யவர், மாண­வர்­க­ளுடன் மட்­டு­மல்ல,  எவ­ரு­டனும் மிகவும் இல­கு­வாகப் பழகி, நட்பு பாராட்டும் ஒருவர். பேரா­த­னை­யி­லுள்ள பல புத்­தி­ஜீ­வி­க­ளி­டயே எளி­மைத்­த­னத்தை தனக்கே உரித்­தாக்கிக் கொண்­ட­வர்­களில் ஒருவர்.
தனிச்­சி­றப்­புக்கள்
1)  தனது ஆய்­வுப்­பி­ர­தே­சங்­க­ளையும், ஆய்வுப் பிரச்­சி­னைக்­கான, கருக்­க­ளையும் சமூ­கத்­திற்கு மிகப் பிர­யோ­ச­மான, நடை­முறை சார் விட­யங்­களை அடிப்­ப­டையாகக் கொண்டு வடி­வ­மைத்­த­துடன், அவற்றை உரிய நேரத்­திலும், உட­ன­டி­யா­கவும் மேற்­கொள்­வது அவ­ரது தனிச்­சி­றப்பு. 
2) முஸ்­லிம்கள் தொடர்­பான  நடை­முறைப் பிரச்­சி­னை­களை  "Academical methods" ஐ அடிப்­ப­டையாகக் கொண்டு, நாட்டின் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு university level,  National, & International levels களில் விளங்­கப்­ப­டுத்­தி­யவர்,
3) தான் பிறந்த சமூ­கத்தின் "பல­வந்த வெளி­யேற்றம்" பற்­றிய தக­வல்­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தி­யவர் மட்­டு­மல்ல, அத­னையே தனது வாழ்நாள் ஆய்­வாகக் கொண்­டி­ருந்­தவர், பல புத்­த­கங்கள், ஆய்வுக் கட்­டு­ரை­களை வெளி­யிட்­டவர்.
4) தனது ஆய்­வு­களில், தனது இனம்­சா­ராத பல வெளி­நாட்டு, உள்­நாட்டு புத்­தி­ஜீ­வி­க­ளுடன் இணைந்து பணி­யாற்றி தனது Muslim Role இன் நியா­யங்­களை உறு­திப்­ப­டுத்­தி­யவர், Ex. Prof, Jonathan Spencer, Banadic, Barth , & prof , kalinka Tudor Silva, போன்­றோரைக் குறிப்­பிட முடியும்.
5), அவ­ரது ஆய்­வு­களை Scientific  ஆக புள்ளி விப­ரங்­க­ளுடன் தெளி­வாக வாதிக்கும் ஆற்றல் கொண்­டவர். இவ­ரது இந்த இயல்பு பல இடங்­களில் முஸ்லிம் தரப்பின் நியா­யங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வி­யுள்­ளது மட்­டு­மல்ல, பல அர­சியல் வாதி­களும், தலை­வர்­களும் இவ­ரது ஆய்­வு­களை தமது தேவைக்குப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். Ex. வில்­பத்து குடி­யேற்றம்.
6). இன, பிர­தே­ச­வாத  எல்­லை­க­ளுக்கு அப்­பாற்­பட்டு அனை­வ­ரு­டனும் இணைந்து பழகும் விருப்­ப­மு­டை­யவர். அதனை செயற்­ப­டுத்திக் காட்­டி­யவர். மட்­டு­மல்ல இவ­ரது சர்­வ­தேச, உள்­நாட்டு பித்­தி­ஜீ­வி­க­ளு­ட­னான தொடர்பு இவரை முஸ்லிம் தரப்பின் பிர­தி­நிதி என ஆய்வுப் பரப்பில் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அங்­கீ­கா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தது,
தேடலும், விரைவும்
மாண­வர்­களின் ஆய்­வு­க­ளுக்கும், தனது ஆய்­வு­க­ளுக்கும் களத்­திற்கு சென்று தக­வல்­களை பெறு­வதில் என்றும் தயங்­கா­தவர் மட்­டு­மல்ல, அத­னையே விரும்பிச் செய்யும் தன்மை உடை­யவர். அதில் அவ­ரது எளி­மை­யான வாழ்க்கை முறை பெரிதும் உதவி புரிந்­தி­ருக்­கி­றது. உரிய காலத்தில் அவற்­றினை முடிப்­பதில் அதிக அக்­கறை கொண்­டவர். அதனால் அவரை அதிக மாண­வர்கள் விரும்­புவர். அவர் ஆய்­வு­க­ளுக்­காக இலங்­கையின் சகல பாகங்­க­ளுக்கும் சென்­றுள்ளார். குறிப்­பாக முஸ்­லிம்கள் தொடர்­பான குடி­யி­ருப்­புக்­களின் சகல தக­வல்­களும் அவரால் சேக­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. இதில் அவ­ரது தனி மனித உழைப்­புக்கு அதிக பங்­கி­ருக்­கின்­றது.
பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மட்­டு­மல்ல அதற்கு வெளி­யிலும், தனக்­கான தொடர்­பு­க­ளையும், நண்­பர்­க­ளையும் அதிகம் கொண்­டி­ருந்த ஒருவர். தான் கண்­டியில் வாழ்ந்­தாலும், கிழக்கு,  வடக்­கோடு அதிக தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்த ஒருவர். பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் ,தேசிய மட்­டத்­திலும் பல குழுக்­களில் அங்­கத்­த­வ­ராக, தலை­வ­ராக இருந்து பணி­யாற்­றி­யவர்.
விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் அரச தரப்பின் முஸ்லிம் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்டு பங்­க­ளிப்பை வழங்­கி­யவர்.
மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய குழுவின் முஸ்லிம் பிர­தி­நி­தியாகக் கலந்து அவர் ஆற்­றிய சேவைகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. அதில், தான் பிறந்த சமூ­கத்­திற்கு மட்­டு­மல்ல, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநி­யாயம் இடம் பெற்­றி­ருப்­பதை துணிச்­ச­லாக எதிர்த்தார். மட்­டு­மல்ல, அதற்­காக சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் இணைந்து பல விழிப்­பு­ணர்வுக் கூட்­டங்­க­ளையும் நடத்­தினார். அம்­மு­யற்­சியின் இறுதி முடிவில் தான் வெற்­றி­ய­டைந்த சந்­தோ­ச­மான தரு­ணத்­தி­லேயே அவ­ரது உயிர் பிரிந்­தி­ருக்­கின்­றது்
அதேபோல் தேசிய சூறா கவுன்சில், கண்டி போறம் போன்­ற­வற்றில் இணைந்து அவற்றின் முக்­கிய செயற்­பாட்­டா­ள­ரா­கவும் இருந்தார்.
 தனது, குடும்பச் சுமைகள், தனிப்­பட்ட விட­யங்கள், தனது சுக நலன்­களை ஒரு­பு­றத்தே வைத்­து­விட்டு சமூ­கத்­திற்­கா­கவும், ஆய்­வுக்­கா­கவும் முன்­னின்­று ஊக்­க­முடன் செயற்­பட்ட ஓர் உயிர் பிரிந்­தி­ருக்­கின்­றதை நினைக்­கும்­போது, சமூக ஆர்­வ­மிக்க அனை­வரும் தமது அனு­தா­பங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.
இறு­தி­யாக, என் உணர்­வுகள்
பல்­க­லைக்­க­ழ­கத்­திலும், தனிப்­பட்ட வாழ்­விலும் பேரா­த­னையில் எனக்கு என்றும் உத­வி­யாக இருக்கும், பலரில்  பேரா­சி­ரி­யர், அனஸ், பேரா­சி­ரியர், நுஹ்மான், பேரா­சி­ரியர் ஷாஹுல் ஹஸ்­புல்லாஹ்  போன்றோர் மிக முக்­கி­ய­மா­ன­வர்கள். அவர்களில் ஹஸ்புல்லாஹ்வின்  இன்றைய இழப்பு அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் மிகுந்த மன வேதனையையும்,  கவலையையும்  தந்திருக்கின்றது...
வளாகக் காலங்களிலும், தனது ஓய்வுகாலத்திலும், கல்விக்காகவும், ஆய்வுக்காகவும், மாணவர்களுக்காகவும், , சமூகத்திற்காகவும் பாடுபட்ட மறைந்திருக்கும் மனிதனின் சிறப்பும், இறப்பும் பல எண்ணங்களை எமக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இவர் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் இவரது இழப்பு விதைத்துள்ளது.
தான் நேசித்த மக்களினாலும், தான் புரிந்த பணியுடன் தொடர்பு பட்டவர்களினாலும்  புடைசூழ, தான் எந்த மண்ணின் இருப்புக்காகப் பாடுபட்டாரோ  அந்த மண்ணிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு   தனது இறுதிப் பயணத்தை   முடித்திருக்கும் பேராசிரிர் ஹஸ்புல்லாஹ்வுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக...
கண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம்,  சென்று வாருங்கள் சேர்....
உங்கள் எண்ணங்களும், எழுத்துக்களும் என்றும் உங்களை வாழவைக்கும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By