அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள்அம்பாறை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்களை வழங்குவதற்கு சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி,கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 13 வைத்தியசாலைகளுக்கு 15 வாகனங்களை வழங்குவதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதி அமைச்சர் சுகாதார அமைச்சின் வாகனங்கள் தொடர்பான பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில்
இறக்காமம்,அட்டாளைச்சேனை,பாலமுனை,சாய்ந்தமருது,மருதமுனை,தெஹியத்தகண்டி,மஹாஓய,பதியத்தலாவை,கல்முனை வடக்கு,அக்கரைப்பற்று,சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா ஓர் அம்புலன்ஸ் வீதமும் நிந்தவூர் மற்றும் பொத்துவில் ஆகிய வைத்தியசாலைகளுக்கு தலா இரண்டு அம்புலன்ஸ் வீதமும் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஏனைய வைத்தியசாலைகளுக்கும் அம்பியூலன்ஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் பைசல் காசீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...