தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..?


தேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ்


முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், தற்போதைய பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை வெளியேறுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிருந்து தெரியவருகிறது. 


தேசிய காங்கிரஸை கட்டியெழுப்புவதில் முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை அண்மைக்காலமாக அக்கட்சியின் தலைவர் அதாவுல்லாவின் செயற்பாடுகளில் அதிர்ப்தியடைந்திருந்த நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் பதவி உயர் என்ற பெயரில் கச்சிதமாக பதவி இறக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய பதவியான தேசிய அமைப்பாளர் என்ற பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு பிரதி தலைவர் என்ற பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அன்றைய பேராளர் மாநாட்டில் சாரத்துடன் வந்திருந்த மாத்திரமின்றி உரையாற்றவும் மறுத்திருந்தார். 


கட்சியின் தலைவர் அதாவுல்லாஹ் தேசிய காங்கிரஸை குடும்ப மயப்படுத்தி அவரது இரண்டு புதல்வர்களையும் கட்சியின் உயர் அந்தஸ்த்துக்கு நியமித்தமையும், கட்சிக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி அவரது புதல்வர் சகி அஹமட்டை மீண்டும் மாநகர சபை மேயராக மாற்றியமையும், அடுத்த புதல்வரான டில்சானை மாநகர சபை உறுப்பினராக நியமித்தமை போன்ற காரணங்களினலயே உதுமாலெப்பையும் அவரது அணியினரும் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர். 


சகி அகமட்டை மேயராக்கிய விடயத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதி மேயர் சபீஸ், மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஆகியோர் முரண்பட்டு அவரது ஆதரவாளர்கள் தலைவர் அதாவுல்லாஹ்வுக்கு எதிராக கொடும்பாவி எரித்தும் கறுப்புக்கொடி மற்றும் டயர் எரித்தும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். இந்த பின்னணியிலையே கட்சியின் இன்னுமொரு முக்கியஸ்தரான சட்டத்தரணி பஹீஜ் கட்சி தலைவருக்கு எதிராக மறைமுகமாக விரல் நீட்டி வருகின்றார். பேராளர் மாநாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட பதவிக்கு சமனான முறையில் சட்டத்தரணி இல்லாத ஒருவருக்கு அதே பதவியை வழங்கியமையால் பஹீஜும் கட்சியில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனர். 


உதுமாலெப்பையின் மிக நெருக்கமான கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முக்கிய பதவி வகிக்கு அதிபர் ஒருவருக்கு கட்சியின் உயர்பீடத்தில் அதாவுல்லா இடம்வழங்கிய போதும், அந்த பதவியை குறித்த அதிபர் ஏற்க மறுத்து தலைவர் மீதான அதிருப்தியை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


தேசிய காங்கிரஸ் என்ற போர்வையில் தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் மாத்திரம் ஊர் காங்கிரஸை வளர்த்து அந்த ஊருக்கு மட்டும் அபிவிருத்தியை மேற்கொண்டு வரும் அதாவுல்லா அட்டாளைச்சேனைக்கு எதுவுமே செய்யவில்லை என்ற குறைபாடு மக்களிடத்திலும், உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் மத்தியில் நிறையவே உள்ளது. அல்லாஹ்விலும் நம்பிக்கையில்லாமல் ”வாப்பா”வில் மாத்திரமே நம்பிக்கை வைக்கும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் தேய்யும் காங்கிரஸாக மாறி வருகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...