அஸ்மின் ஐயுப் தொடர்பில் வந்த செய்தி பொய் - வலம்புரியை எரித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தெரிவிக்காத கருத்தொன்றினை அவர் தெரிவித்ததாகக் கூறி இன்றையதினம் 01-09-2018 அன்றைய வலம்புரி நாளிதழ் தலைப்புச் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. குறித்த செய்தியான வடக்கு முஸ்லிம்களின் இருப்பு சார்ந்த அடிப்படையினைத் தகர்ப்பதாகவும்; அவர்களின் வாழ்வுரிமையினைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும்; அவர்களது எதிர்காலத்தை அமைதியற்றதாக மாற்றுவதுமே குறித்த செய்தியின் நோக்கமாகும். எனவே குறித்த செய்தியை வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களின் பெயரோடு பிரசுரித்துள்ளமை அப்பட்டமான போக்கிரித்தனமே தவிர வேறு எதுவுமல்ல.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தான் குறிப்பிடாத ஒரு கருத்தை வலம்புரி பிரசுரித்திருப்பதாக தனது மறுப்பறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்; இருப்பினும் இதனோடு இது நின்றுவிடமுடியாது, வலம்புரி பத்திரிகையானது இலங்கையின் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்பட்டிருப்பதோடு ஒரு சமூகத்தினது இருப்பு சார்ந்த கேள்வியையேற்படுத்தியிருப்பதோடு அவர்களது எதிர்கால இருப்பையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கின்றது எனவே மேற்படி விடயமானது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லது வேறு விஷேட சட்டத்தின் கீழ் இவ்விடயம் கையாளப்படுதல் வேண்டும்.
எனவே உண்மைக்கான வடக்கு மக்கள் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய வலம்புரிப் பத்திரிகைக்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குறித்த பத்திரிகை வடக்கின் அமைதிக்கு எதிராக செயற்படுகின்றதென்றும், முஸ்லிம் மக்களை மற்றுமொரு இனச்சுத்திகரிப்பு அச்சத்திற்குள் தள்ளிச் செல்கின்றது என்பதையும் தெளிவாக முன்வைத்தார்கள், இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் அதே சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த வடக்கு மக்களினதும் அமைதியான வாழ்விற்கு எதிரான பொய்யுரைக்கும் பத்திரிகையாகவே வலம்புரி செயற்படுகின்றது. இத்தகைய பத்திரிகையொன்றினை உடனடியாகத் தடைசெய்யவேண்டும் என்பதோடு இலங்கை அரசாங்கமும், சர்வதேச சமூகமும் குறித்த பத்திரிகையினை ஆபத்தான சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பத்திரிகையாக அடையாளப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்கள்
தகவல் என்.எம்.அப்துல்லாஹ்
அஸ்மின் ஐயுப் தொடர்பில் வந்த செய்தி பொய் - வலம்புரியை எரித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் அஸ்மின் ஐயுப் தொடர்பில் வந்த செய்தி பொய் - வலம்புரியை எரித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by NEWS on September 01, 2018 Rating: 5