இலங்கை முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை ஐ.நா முன்றலில் போராட்டம் - றிம்ஜான் அறிவிப்பு
இலங்கையில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு இராணுவ மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் இடம்பெற்றுள்ளது, இது தவிர விகாரைகள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளது இதற்கு எதிராக மனித உரிமைகள், ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு ஐ.நா முன்றலில் எமது அமைப்பு பேராட்டம் நடாத்த தயாராகியுள்ளதாக தன் தலைவர் ஆசுக் றிம்ஜான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 50,000 ஏக்கர் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய் உள்ளது, இதனை வாய்மூடி அரசியல் வாதிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இதற்கு சிவில் அமைப்புகள் போராட்டம் நடாத்த முன்வரவேண்டும் என்றார்.

எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நாவின் 39வது அமர்வு இறுதிக்கட்டத்தை எட்டும்போது இந்த பேராட்டம் நடாத்தப்படும் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...