பிரதி அமைச்சரின் இணைப்பாளராக யு.சி. மெம்பர் எம்.டீ.ஹரீஸ் நியமனம்ஹஸ்பர் ஏ ஹலீம்

கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர்  எம்.எஸ்.எஸ். அமீர் அலி  அவர்களினால், கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சரின் இணைப்பாளராக இன்று (07) கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி வழங்கி வைத்தார்.

இவர் கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  உருப்பினர் ஆவார்.
 இவர் முன்னாள் கிண்ணியா ஐக்கிய தேசியக் கட்சியின் கிண்ணியா நகர சபை எதிர்கட்சித் தலைவாக இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர் குறிப்பாக இதனை மீனவர்களுடன் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசித்து அமைச்சின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இதனை அமைச்சர் எனக்கு அளித்துள்ளார்.

இது சந்தர்ப்பமாக மீனவர்களின் நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுவதற்கான வாய்ப்பாக அமையும் என நியமனத்தின் போது நகர சபை உறுப்பினர் எம்.டீ.ஹரீஸ் இதன் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...