மு.காவை அழிக்க வெளியிலிருந்து யாரும் தேவையில்லை, தலைவரே போதும்இலங்கை முஸ்லிம்களின் பொதுவான கட்சி என்று கூறிக்கொள்ளும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் இருப்பவர்கள் அழிக்க நினைக்கிறார்கள் என்ற கட்சியினரின் கோசமானது ஆகவும் முட்டாள்தனமானதே. போராளிகள் என்று தங்களை கூவிக்கொள்ளும் அடிமட்ட முட்டாள்கள் சிலர் கட்சியை விட தலைவருக்கு விசுவாசமாக இருப்பதும் அவர்களின் சாபக்கேடே!
தலைவர் என்று கூவும் ரவூப் ஹக்கீம் அந்தக் கட்சியின் தலைமைப் பதவிக்கு அனுவளவும் பொருத்தமற்றவர் என்பதோடு இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைக்கு இச்சளவும் கூட தகுதியற்றவர் என்பதும் அவருக்கே தெரிந்த உண்மை. இருந்தும் அரசியல் விலைபேசலுக்கு அவரே பொருத்தமானவர் என்பதனால் தொடர்ந்து கொண்டிருக்கிறார் தன் பயணத்தை.
மக்கள் அதிகாரத்தை தனக்கென பயன்படுத்தி கட்சியை தன்வசப்படுத்தி சின்னாபின்னமாக்கி, உரிமையை பேசவேண்டிய, அபிவிருத்தியை பொழிய வேண்டிய கட்சியை இன்று செல்லாக்காசாக மாற்றிய அந்தப் பெருமைக்குரியவர் குறித்த தலைவரே. அவரின் கையாலாக தனமே இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று பல கட்சிகள் உருவாக காரணம். மக்கள் பல பக்கம் திசை திருப்பப்படவும் காரணம்.
அல்குர்ஆன், ஸீன்னா அடிப்படையில் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவ கட்சி இன்று பொய், ஏமாற்று, வஞ்சகம், போட்டி, துரோகம் கலந்து மக்களை மந்தைகளாக பேதலிக்க வைத்த ஒரு கட்சியாக மாற்றம் பெற முற்று முழுதான காரணம் தலைவரே.
உரிமைகளையும் உண்மைகளையும் பேசுவோர் கட்சியை விட்டு தூரமாக்கப்படவும், கட்சிக்கு எதிரானோர் பொருத்தமற்றோர், தலைவருக்கு விசுவாசமானோர் கட்சிக்குள் உள்வாங்கப்படவும் அவரே காரணம். வடக்கில் செழித்திருந்த கட்சியை சிதைத்தார். இன்று கிழக்கிலும் அதனை செய்து கொண்டிருக்கிறார்.
இதனை கண்டும், உண்மை தெரிந்தும் பேசா மடந்தைகளாக பல படித்த கூட்டம் கட்சிக்குப் பின்னால் நாரே தக்பீர் கூறிக்கொண்டு அநீதிகளுக்கு துணைபோகின்றனர். ஆன பலன் எதுவுமற்ற ஒரு கட்சியினை மக்கள் மறந்துவிட்டார்கள். விரைவில் மொத்தமாக மறந்துவிடுவார்கள்.
கட்சியின் அழிவுக்கு காரணமாக யாரும் வெளியில் இருந்து வரத்தேவையில்லை. கட்சியை வளர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு சிறிது சிறிதாக விற்றுப்பிழைக்கும் தலைமை போதும் விரைவில் கட்சிக்கு முடிவு சொல்ல. கட்சியினை வளர்க்க வேண்டுமாக இருந்தால் முதலில் தலைமையை புறக்கணிக்கவேண்டும். போலித் தலைமையை தூக்கி வீச வேண்டும்.
நாரே தக்பீர் சொல்லிக்கொண்டு ஹக்கீமுக்கு பின்னால் அலையும் குருட்டு கூட்டம் உள்ளவரைக்கும் ஹக்கீம் வாழ்வார்! கட்சி அழிந்தே போகும்!!

ஹஸ்னி அஹமட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...