தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 19, 2018

அரசியலிருந்து ஓய்வு பெறுகிறார் மு.காவின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்!

(சிலோன் முஸ்லிம், கொழும்பு)  எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தீமானத்தை இதுவரை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், தொழிசார் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடவுள்ளதாகவும்  அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

நான் கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை சீராக முன்னெடுத்ததுடன், அதற்கான நிதிமூலங்கள் பல்வேறு வழிகளிலும் பெற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் தற்போது அபிவிருத்தி என்பது வெறும் பூச்சியமாகவே உள்ளது. ஒரு பக்கம் அபிவிருத்தியை மன்னெடுத்த அதேவேளை மறுபக்கம் மடக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்ட காலப் பகுதிகளுக்குள் வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு செல்ல முடிந்தது. 

எதிருவரும் மாகாண சபை தேர்தலில் கல்குடாவின் மாகாண சபை பிரதிநிதித்துவம் பாதுகாப்பட ஒன்றிணைந்து பணியாற்றவும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கான பல்வேறு வழிகள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றேன். 

ஏறாவூறில் அமையப்பற்ற தொழிசாலைகளைப் போன்று இப்பிரதேச யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு முடிவு கானும் வகையில் தொழிற்சாலைகளை எதிர்காலத்தில் உருவாக்க திட்டமிட்டு தொழிலையே முன்னுரிமைப்படுத்துவதாகவும் தெரிவித்த நசீர் அஹமட், கட்சியின் நடவடிகைகளில் இருந்தும் அரசியல் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் நாசூக்க தெரிவித்தர். 

தினக்குரல் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages