2018.09.02 இன்று பள்ளிக்குடாவில் பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டு விழா காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் , பிரதியமைச்சருமாகிய மஸ்தான் அவர்களின் தந்தை , வடக்குமாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள், சமூக சேவையாளர் சகோதரர் மிஹ்லார் அவர்கள், யாழ் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளான சகோதரர் ஐ.எல்.நிராஸ், எம்.எல்.லாபிர், ஏ.சி.நைசர், ஐ.எல்.நிம்ரூஸ், ஆர்.சல்பீர், அனஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி அடிக்கல் நாட்டு நிகழ்வை சட்டத்தரணி றைகாண் மற்றும், சகோதரர் பாயிஸ், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேற்படி நிகழ்வில் அப்பகுதி மக்கள் கலந்து சசறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தகவல்: என்.எம்.அப்துல்லாஹ்

Share The News

Post A Comment: