”ஜனாதிபதியை கொலை செய்ய ரணிலே திட்டம் ”

NEWS
0 minute read
0


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் சூழ்ச்சிகளுக்குப் பின்னால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார் என அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ளவே இவ்வாறு ரணில், மைத்திரியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அந்த அணியினர் மேலும் தெரிவித்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே பொலிஸ் திணைக்களம் இயங்குவதாக கூறிய அந்த அணி, ஆகவே ஜனாதிபதி தன்னை பாதுகாத்துகொள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சட்டம் ஒழுங்கு அமைச்சை, தன்னுடைய பாதுகாப்பு அமைச்சின் ​கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

புஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள எம்.பிகளான, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் கூட்டாக மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தமி.மிரர்
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)