தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Sep 10, 2018

அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர்கூடம் ஒரு வருடத்துக்குள் பூர்த்தியாகும்!
நிந்தவூரில் 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 2 ஆயிரம் பேர் அமரக்கூடிய எம்.எச்,எம்,அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தின் வேலைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குள் நிர்மாணப் பணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.அதற்கு ஏற்ப இப்போது அதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
 சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஸ்தலத்துக்குச் சென்று நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதோடு ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகளை  நிறைவு செய்வதற்கான அணைத்து ஆலோசனைகளையும் வழங்கினார்.
 சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோது அவரால் இந்தக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages