பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலையாகும்வரை தாடி வளர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இன்று பிற்பகல் சிறி ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்ட போது ஞானசார தேரர் தாடியுடன் உள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியர்களின் பரிந்துரைக்கேற்ப இன்று மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றசாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: