இலக்கியத்திற்கான விருதினை பெறுகிறார் கிண்ணியா ஏ. ஜே.முஹம்மது நஸீம்
ஹஸ்பர் ஏ ஹலீம்


உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தப்பட்ட சிறந்த அரச இலக்கிய விருதிற்கான இளையோர் நாவல் இலக்கிய விருதினை பெறுகிறார். கிண்ணியா ஏ.ஜே.முஹம்மது நஸீம்.

"குஞ்சி முட்டிச் சோறு" எனும் இளையோர் நாவலுக்கான விருதை பெறவிருக்கிறார்.
அரச இலக்கிய விருது வழங்கல் நிகழ்வானது எதிர் வரும்( 11.09.2018) அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.

இவ் விருது வழங்கல் நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனா, உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜேதாசராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரோ உட்பட உயரதிகாரிகள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...