மாயக்கல்லியை மீட்டெடுக்க போராடும் சாமான்யர்கள் - வாய்மூடியிருக்கும் மௌனிகள்!


கிழக்கு மாகாணக் காணி ஆணையாளருக்கு முதலாவது ஆட்சேபனை மனு 06 சட்டரீதியான எதிர்ப்புக்களுடன் மாயக்கல்லி மலைக் குழு செயலாளரும் சட்டத்தரணியுமான பாறூக்சாஹிப் அவர்களால் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பிரதியை இறக்காமம் பிரதேச செயலாளர் MM.நஸீர் பெற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கு முகவரியிட்டு,
இறக்காமம் DS, அம்பாரை GA, அம்பாரை நில அளவை அத்தியட்சகர் ஆகியோருக்கு பிரதியிடப்பட்ட முதலாவது ஆட்சேபனை மனு மாயக்கல்லி மலைக் குழு செயலாளரும் சட்டத்தரணியுமான பாறூக்சாஹிப் அவர்களால் இன்று தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிரதி இறக்காமம் பிரதேச செயலாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வில் UPA அமைப்பாளர் சமீம் அவர்களும் கலந்து கொண்டார்.
இம் மனுவில் 06 அடிப்படை எதிர்ப்புக்கள் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
01 தொடக்கம் 06 வரையான எதிர்ப்புக்களை கடிதத்தில் காணலாம்
மேலும் நாளை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் MIM.மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள DCC Meeting ல் "விகாரை கட்ட காணி வழங்க முடியாது" என்ற தீர்மானம் எடுக்கும் வரை காணி வழங்கும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...