02 பாரிய குடிநீர் திட்டம் இலங்கையில் ஆரம்பம் !

களுத்துறை, மத்துகம பகுதிகளில் இரு பாரிய நீர் விநியோக திட்டங்களுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. திட்டத்தினூடாக ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. 

களு கங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நீரை களுவாமோதரயை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படும் நீர் விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் உவர்நீர் கலக்கும் பிரச்சினைக்கு களுத்துறை மாவட்ட மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த நீர்விநியோக திட்டத்தினூடாக இப்பிரச்சினைக்கு துரித தீர்வு கிடைக்குமென நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
02 பாரிய குடிநீர் திட்டம் இலங்கையில் ஆரம்பம் ! 02 பாரிய குடிநீர் திட்டம் இலங்கையில் ஆரம்பம் ! Reviewed by NEWS on October 22, 2018 Rating: 5