10 மில்லியன் ரூபாய் செலவில் வாசனைத் திரவிய இயந்திரம்!

மேல்மாகாண சபைக்காக அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத்தில் நறுமணம் வீசுவதற்காக பொறுத்தப்பட்டுள்ள வாசனைத் திரவியம் (ஏர் பிரஷ்னர்) 10 மில்லியன் ரூபாய் பெறுமதியானது என மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சுலோச்சன கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த வாசனைத் திரவியத்தை மீள் நிரப்ப 26 இலட்ச ரூபாய் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
15 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தில் மொத்தமாக 875 வாசனைத் திரவிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இவை தலா 18,700 ரூபாய் என சுலோச்சன கமகே தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...