15 மில்லியன் ரூபா நிதி மோசடி :நாமலின் வழக்கு ஒத்திவைப்பு

15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் 07ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (25) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் ஆலோசனைப் படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...