1500 இலட்சம் வைப்பு தொடர்பில் துமிந்த விளக்கம்

வெளிநாட்டு வங்கி கணக்கு ஒன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு 1500 இலட்சம் ரூபா பணம் வைப்பிட்டுள்ளமை தொடர்பாக என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானதாகும் என நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.  அத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கொன்றிலிருந்து எனது கணக்குக்கு பணம் வரவேண்டியதற்கான அவசியமும் இல்லை, அவ்வாறான வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் நான் ஈடுப்படவுமில்லை. 
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒருசில மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழல்களுக்காக மொத்த உறுப்பினர்களின் மீதும் குற்றம் சுமத்த முடியாது. வெளிநாட்டு வங்கி கணக்கிலிருந்து பணம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கான அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரினார். 
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு வங்கி கணக்கொண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு பணம் பகிரப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...