இனி பாராளுமன்றம் நவம்பர் 16 ஆம் திகதியே - மைத்திரி அதிரடி

உடனடடியாக அமுலுக்கு வரும் வகையில் கூட்டத்தொடர் பிற்போடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய பாராளுமன்றம் பிற்போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை கூடவிருந்தமை கூறத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...