மைத்திரி ரணிலின் செல்லப்பிள்ளை ஹகீம் எங்கே?

ஜனாதிபதியுடனும் பிரதமரிடமும் நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கைதான் இந்த ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர என்று கூறிவிட்டு பாலமுனை மாநட்டுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு சென்ற அமைச்சர் ஹக்கிம் எங்கே இருக்கிறார் என்பதே பலரின் கேள்வியாகும்.

இத்தனை காலங்களும் அந்த மக்கள் பட்ட கஷ்டங்களை கண்டும் கானாதுபோல் இருந்து விட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தவரைப் போன்று இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதிய அமைச்சர் பைசால் காசீம் ஆவார்.

மக்களின் உணர்வுகளை அறிந்தும் அவர்களை நேரடியாக சந்தித்துப் பேசியும், நான் தலைவரிடம் பேசி கடலரிப்புக்கு தீர்வை பெற்றுத் தருகிறேன், மீனவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற அமைச்சர் ஹரீஸ் எங்கே?

இவர்களுக்கு இந்த ஒலுவில் மக்கள் இருப்பைப் பாதுக்காக்கும் போராட்டத்தை என்னவென்று பார்ப்பதற்கு கூட நேரம் கிடைக்க வில்லையா? இல்லை அவர்கள் கிடந்து கத்தி விட்டுப் போகட்டும் என்று ஒழிந்து நின்று வேடிக்கை பார்க்கிறார்களா? என்று மக்கள் குமுறுகின்றனர்
மைத்திரி ரணிலின் செல்லப்பிள்ளை ஹகீம் எங்கே? மைத்திரி ரணிலின் செல்லப்பிள்ளை ஹகீம் எங்கே? Reviewed by NEWS on October 09, 2018 Rating: 5