பிரதான செய்திகள்

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பதவியில் இருந்து அகற்றிவிட்டு புதிய ஆட்சியினை கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்புடன் முதலாவதாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டு இந்த அரசியலில் சிறுபான்மை முஸ்லிம்,சமூகத்தினை காட்டிக் கொடுப்புக்குள்ளாக்கிய ஒருவர் இன்று தன் கையில் உள்ளதை வைத்து எதையும் செய்யாமல் மற்றவர்கள் செய்கின்றவற்ற பறித்து அதனையும் வைத்து அழகு பார்க்க ஆசைப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளமை தொடர்பில் இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்பதை உணர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த மக்கள் அகதிகளாக துரத்தப்பட்ட சம்பவத்தினையடுத்து ஏற்பட்ட மன உலைச்சல்கள்,இந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள்,எதிர்கால இறுப்புக்கள் தொடர்பில் தூர சிந்தணையுடன் செயற்பட்ட இளம் நேர்மையான சிந்தணைக் கொண்ட தற்போதைய அரசில பலமிக்க ஒரு அமைச்சராக இருக்கும் றிசாத் பதியுதீன்,தனது வடக்கு மக்களின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக நொட்டின் தலைமைக்கு தெளிவாக சொன்ன செய்தியினால் அமைச்சர் றிசாத் மீது கொண்ட நம்பிக்கையும்,அவரது சமமான செயற்பாடுகளாலும் வழங்கப்பட்டது தான் மீள்குடியேற்ற செயலணியாகும்.

இந்த செயலணி என்பது கடந்த காலத்தில் பல அரசியல் தலைவர்களின் சம தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய போதும்,மக்கள் எதிர்பார்த்தவற்றை செய்வதில் காணப்பட்ட தடைகளையும் அகற்றும் வகையில் அமைச்சரவையின் மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற செயலணி கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.இது அரசாங்கத்தின் சட்ட கோவையான வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.இதன் பிற்பாடு செயலணியின் செயற்பாடு வடக்கில் வாழும் சகல சமூகங்களுக்கும் சமமான முறையில் அவரக்ளது வேண்டுகோள்கள் மற்றும் தேவைப்பாடுகள் என்பகவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட்டுவருகின்றது.

அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதியின் தலைமையிலான செயலணி மீளாய்வுக் கூட்டத்திலும் அபிவிருத்திகளின் விகிதாசாரம் தொடர்பில் பேசப்பட்டு,மேலும் துரிதமாக வடக்கு அபிவிருத்தியினை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.இந்த வேளையில் ஜனாதிபதி பகிரங்கமாக கேட்டுக் கொண்ட விடயம் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினை இருப்பின் இந்த கூட்டத்தில் பிரஸ்தாபிக்குமாறும்,வெளியில் சென்று விமர்சிக்க வேண்டாம் என்றும்.இது சிலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று தான் இருக்கின்றது.

அரசியல் அறிவில்லாதவர்கள் அரசியல் தலைமைக்காகவும்,மக்களை வழி நடத்தவும் வருகின்ற போது ஏற்படும் விபரீதங்களை தற்போது தினந்தோறும் எம்மால் காணமுடிகின்றது.தன்னால் எதனையும் செய்ய முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு இடம் கொடுத்து அதனை செய்வித்து மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் தமது எண்ணங்களை மாற்றி செயற்படுத்த வேண்டுமே ஒழிய மக்கள் அடையம் நன்மையினை ஒரு போதும் தடுத்து நிறுத்த முனையும் எந்தவொரு செயற்பாட்டினையும் புத்தியுள்ள எவரும் செய்ய மாட்டார்கள் என்பது தான் மனித நேயப் பண்புகளை கொண்டவர்களின் பார்வையாகும்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஒரு முஸ்லிம் ஒருவருக்கு இந்து கலாச்சர அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது இந்த நாட்டு இந்துக்கள் தமது வருத்தத்தை தெரிவித்தனர் .இது நியாமானது அவர்களது மதம் சார்ந்த விடயங்களை அறிந்தவர்கள் குறிப்பாக அந்த மதத்தை சார்ந்த ஒருவர் தான் நியமிக்கப்பட வேண்டும்.ஒரு முஸ்லிமுக்கு அந்த பதவி வழங்கப்பட்ட உடன் இது எமக்கு பொருந்தாது என்று கூறி மீள் ஒப்படைக்காமல் அதற்கு வியாக்கியானம் கூறிய போதே இவரது அரசியல் அறிவினை கண்டு கொள்ள முடிந்தது.

இப்படிப்பட்ட நிலையில் மீள்குடியேற்ற செயலணியினை விமர்சனம் செய்வதும்,அதற்கு தடை ஏற்படுத்துவதும்,இன முறுகலை ஏற்படுத்தி ,இதனை வைத்து ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் சிறுபிள்ளைத்தனமான தொன்றாகும்.வடக்கு பிரதி அமைச்சர் என்பது முழுமையாக வடக்கினை அபிவிருத்தி செய்வதாகும்,இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் அநருக்னகமான உறவை ஏற்படுத்தி தான் சார்ந்த மற்றும் தமக்கு எதிர்பார்ப்புக்களுடன் வாக்களித்த மக்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவது தான் முக்கியமாகும்.தனக்கு சம்பந்தமில்லாதவற்றுக்குள் தலை நுழைத்து பிரச்சினைகளை உருவாக்கும் வேளையிவல் ஈடுபடுவது இவரது அறியாத்தன்மையினை காட்டுகின்றதா ?

அமைச்சர் றிசாத் பதியுதீனை பொறுத்த மட்டில் அவர் வன்னி புனர்வாழ்வு அமைச்சராக.மீள்குடியேற்ற அமைச்சராக,அனர்த்த நிவாரண அமைச்சராக இருந்து பெரும் சேவையாற்றிய அனுபவமிக்க ஒருவர்,நல்லாட்ச்சி அரசாங்கத்தின் இரு முறை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராகவும் இருந்து வருகின்ற நிலையில் தகுதிக்கேற்ப பிரதி அமைச்சர் பதவி பெற்றுக்கொண்ட நிலையில் அனுபவமும்,ஆற்றலும்,செயற் திறமையினையும் கொண்ட தமது மண்ணை சேர்ந்த றிசாத் பதியுதீனை விமர்சிப்பதன் மூலம் இந்த பிரதி அமைச்சர் எதனை சாதிக்கப் போகின்றார் என கேட்க விளைகின்றேன்.

ஒரு தனி மனிதனாக களத்தில் இறங்கி வேதனையினை சுமந்தவராக ஒட்டு மொத்த வடபுல சமூகத்தின் விடிவுக்காக தன்னை அர்ப்பணம் செய்துள்ள அமைச்சராக இதனையும் கடந்து நாட்டு மக்களுக்கு பணியாற்றும் தேசிய தலைவரான றிசாத் பதியுதீன் தமது வடபுல மக்களுக்கு பணியாற்றவென பெற்றுக் கொண்ட மீள்குடியேற்ற செயலணியினை தனது அமைச்சின் கீழ்தாருங்கள் என வேண்டியுள்ளமையானது.அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்கின்ற பணி மக்களை சென்றடையக் கூடாது என்கின்ற தெளிவான செய்தியினை எடுத்துக் காட்டுகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி என்பது மீள்குடியேற்ற செயலணியுடன் போட்டி போட்டுக் கொண்டு அபிவிருத்திகளையும்,குறிப்பாக மீள்குடியேற்றத்தினையும் துரிதப்படுத்த வேண்டிய நிலையில் அதனைவிடுத்து சகோதர அமைச்சருக்கு வழங்கிய செயலணியினை பறித்து தனக்கு தாருங்கள் என சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைஊடகங்களுக்கு விதைத்து வரும் பொறுப்பற்ற செயல்கள் வடக்கு மக்களுக்கு பெரும் பின்னடைவினையேற்படுத்தும் என்பதை பிரதி அமைச்சர் புரிந்து கொண்டு செயற்படுவது அவர் சமூகத்திற்கு செய்யும் பெரும் நன்மையாகவே பார்க்க நேரிடுகின்றது.

- தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget