வாசிப்பு மாதத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கவிதைப்போட்டி.

தேசிய வாசிப்பு மாதமாகிய ஒக்டோபர் மாதத்தை அனுஷ்டிக்கும் வகையில் காத்தான்குடி பொது நூலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான கவிதைப் போட்டி 15.10.2018 திங்கட்கிழமை நூலக உதவியாளர் SLM. முபாறக் தலைமையில் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கான கவிதை எழுதும் போட்டியில் நூலகர் ILM. நசீம்,  காத்தான்குடி நகர சபை கணக்காளர் AS.மனாஸிர் அஹ்ஸன்,  ஆசிரியர் ALM.சித்தீக் மற்றும் நூலகத்தின் ஊழியர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் முழுவதும் வாசிப்பு தொடர்பான பல செயற்திட்டங்களை காத்தான்குடி நகர சபை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


- எம்.பஹ்த் ஜுனைட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...