மன்சூரின் அழைப்பை கவனத்திற்கொள்ளாத கரங்கா வட்டைக்காரர்கள்..!

முஸ்லிம்களுக்கு சொந்தமான, வளத்தாப்புட்டி கரங்கா வட்டையில் பேரினவாதிகள் அத்து மீறி, உள் நுழைந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விடயம் யாவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து அப் பகுதி விவசாயிகள் குறித்த பிரச்சினைக்குரிய பகுதியில் அமைந்துள்ள விகாரையின் விகாராதிபதியுடன் பேசியதை தொடர்ந்து பிரச்சினை சுமூகமான நிலைக்கு வந்திருந்தது.

இது தொடர்பான அடுத்த கட்ட நகர்வை நோக்கி 2018.10.15ம் திகதி திங்கள் கிழமை ஒன்று கூடிய பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் பா.உ மன்சூர் உட்பட சம்மாந்துறை அரசியல் வாதிகளுக்கு நற் செய்தி என்ற பெயரில் குறித்த செய்தியை வெளிப்படுத்தியிருந்தனர். பா.உ மன்சூர், குறித்த செய்தியை கூறிய நபரிடம் 2018.10.16ம் திகதி செவ்வாய் கிழமை, குறித்த விவசாயிகளுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஒரு கலந்துரையாடலை, தான் மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, குறித்த அழைப்பை சம்மாந்துறை பிரதேச செயலாளரினூடாகவும் விடுத்திருந்தார்.
அக் காணி உரிமையாளர்கள் பா.உ மன்சூரிடம் பேசுவதற்கு சற்று முன்னர் தான், சம்மாந்துறை பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு பேசியிருந்தனர். அப்போது, அவர் இது தொடர்பான எந்த தகவலையும் வெளிப்படுத்தி இருக்கவில்லை. எனவே, வயல் பிரச்சினை எமக்கு சாதகமான நிலையை அடைந்து விட்டதால், அதனை பா.உ மன்சூர், தனது அரசியலுக்கு சாதகமாக்க முனைக்கிறார் என சிந்தித்து, அக் குறித்த காணி உரிமையாளர்கள் பா.உ மன்சூரின் அழைப்பை நிராகரிப்பதென முடிவு செய்து புறக்கணித்திருந்தனர். இன்று யாருமே அவரது அழைபுக்கு சென்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்த்த போது, குறித்த கரங்கா வட்டை பிரச்சினை சம்பந்தமாக, இதற்கு முன்னர் குறித்த காணி உரிமையாளர்கள் பல தடவை பா.உ மன்சூரை நாடியும், அவர் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததான் விரக்தியும், குறித்த புறக்கணிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. அது மாத்திரமன்றி குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சர் றிஷாத் முழு முயற்சி எடுத்த, எடுக்கும் நிலையில், நாம் பல முறை சென்றும் காத்திரமான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத பா.உ மன்சூரின் பின்னால் செல்வதை அறிந்து, அமைச்சர் றிஷாத் இவ்விடயத்திலான தனது முயற்சியை கை விட்டால், எமக்கு அரசனுமில்லை. புரிசனுமில்லை என்ற நிலை ஏற்பட்டு விடும் என்பதை குறித்த விவசாயிகளிடம் அவதானிக்க முடிந்தது.

எது எவ்வாறு இருப்பினும், குறித்த காணி உரிமையாளர்களின் இச் செயல் பா.உ மன்சூருக்கு பலத்த அவமானத்தை தோற்றுவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இது தொடர்பில் கேட்போர் அனைவரிடமும், பா.உ மன்சூர் குறித்த காணி உரிமையாளர்கள் தன்னிடம் வந்து பேசவில்லை என்றே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படி கூறுபவர், இது தொடர்பில் எவ்வாறான முயற்சியை மேற்கொண்டிருப்பார் என்பதை நான் கூறியே நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment