கடலரிப்புக்கு தீர்வு வழங்குங்கள், பின்னர் துறைமுக மணலை அகற்றலாம் - ஒலுவில் மக்கள்

ஒலுவில் பிரதேச கடலரிப்புக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தியதன் பின்னரே துறைமுக படகு நுழைவாயிலில் மூடியுள்ள மணலை அகற்ற வேண்டும் என தெரிவித்து ஒலுவில் பிரதேச மக்கள் இன்று காலை துறைமுக பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஒலுவில் துறைமுக நிர்மானப்பணியினால் ஒலுவில் பிரதேச மக்கள் பல்வேறுபட்ட இழப்புக்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருவதாகவும், நிர்மானப் பணியின் போது உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் நிரந்த கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைப்பது மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு விடயம் போன்ற எதனையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் ஒலுவில் துறைமுக நிர்மானிக்கப்பட்டு 10 வருடங்களை கடந்துள்ள இந்நிலையில் கடலரிப்பினால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், தென்னந் தோப்புக்கள் மற்றும் 30 ஏக்கர் நிலங்கள் என்பன கடலினுள் சங்கமாகியுள்ளதாகவும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வர்த்தகதுறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றின் கடல் நுழைவாயிலை மணல் மூடியமையினால் பல மாதங்களாக படகுகள், கப்பல்கள் துற‍ைமுகத்திலிருந்து வெளியே செல்ல முடியாதவாறு மணல் குவிந்து காணப்படுகிறது.
ஆகையினால் இங்கு குவிந்துள்ள மணலை அகற்றுமாறு மீனவர்களும், பிரதேச அரசியல் தலைவர்களும் துறைமுக அதிகார சபையிடமும், உரிய அமைச்சரிடமும் பல முறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குவிந்துள்ள அதிகளவிலான மணலை வெளியே அகற்றுவதனால் கடற்கரையின் ஏனைய பகுதிகளில் பாரிய கடலரிப்பு ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இவேளை சில அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் மணல் அகழ்வதாகக் கூறி இல்மனைட் அகழ்வதற்கான நடவடிக்கை மறைமுகமாக இடம்பெறுகின்றது எனவும் இவர்கள் தெரிவித்தனர்.
கடலரிப்புக்கு தீர்வு வழங்குங்கள், பின்னர் துறைமுக மணலை அகற்றலாம் - ஒலுவில் மக்கள் கடலரிப்புக்கு தீர்வு வழங்குங்கள், பின்னர் துறைமுக மணலை அகற்றலாம் - ஒலுவில் மக்கள் Reviewed by NEWS on October 03, 2018 Rating: 5