வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக தங்களை விடுதலை செய்விப்பதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்  என்றும் தாங்கள்  விடுதலை செய்யப்படாவிட்டால் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் வலியுறுத்தி உள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 
வெலிகடை மெகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் 44 தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம்  பார்வையிட்ட பின்னர் சிறைச்சாலைக்கு வெளியில் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், 
வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமானால்  தமிழ் அரசியல் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை  கூட்டமைப்பு பிரதானமான கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்  என்பதே மேற்படி அரசியல் கைதிகளின் வலியுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கூறினார் . 
தமிழ் அரியல் கைதிகள் , வடக்கு , கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என்று  சகல பகுதிகளையும் சேர்ந்தவர்களாக இருப்பதால்  அப்பகுதிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் ஐக்கியமாக செயற்பட்டு  தங்களின் விடுதலையைப் பெற்றுத்தர வேண்டும்  என்று  அரசியல் கைதிகள் என்னிடம் தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டார். 

Share The News

Post A Comment: