கேரள சமூக செயற்பாட்டாளர் கமல்ஸி இஸ்லாத்தை தழுவினார்!

கேரள சமூக செயற்பாட்டாளர் கமல்ஸி இஸ்லாத்தை தழுவினார்!

”இனியும் இந்துவாக வாழ்வது அவமானகரம். 

முஸ்லிமாக வாழ்வதற்காக அல்ல, மரணிப்பதற்கு கூட அனுமதிக்காத நாட்டில், முஸ்லிமாக மாறுவது இந்த நேரத்தின் அவசியமாகும். இன்று இந்தியாவில் முஸ்லிமாக மாறுவது புரட்சியாகும், போராட்டமாகும். 


இஸ்லாத்தை புரிந்துகொண்டோ, இஸ்லாத்தை குறித்து அறிவதற்கு விரும்பியோ, இஸ்லாத்தின் மகத்துவத்தை கண்டோ நான் முஸ்லிமாகவில்லை.

நஜ்மல் பாபுவுக்கு (ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் இஸ்லாத்தை தழுவுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலில் முதல் வெட்டை சந்திக்க எனது கழுத்து தயாராக உள்ளது.”

அவர் தனது பெயரை கமல்ஸி நஜ்மல் என்று மாற்றிக்கொண்டார்.

குறிப்பு: முன்னாள் நக்ஸல் இயக்க தலைவரும், எழுத்தாளருமான டி.என். ஜாய் 2015ல் இஸ்லாத்தை தழுவினார். அவர் முஸ்லிமாக மாறுவதற்கு முன்பே 2013ல் கொடுங்கல்லூர் சேரமான் மஸ்ஜிதில் தான் இறந்தால் அடக்கம் செய்ய கோரி அந்த மஸ்ஜிதின் இமாமிற்கு கடிதம் எழுதியிருந்தார். நேற்று முன்தினம் மரணமடைந்த அவரது உடலை அவரது விருப்பத்திற்கு முரணாகவும், இஸ்லாமிய வழிமுறைகளுக்கு மாற்றமாகவும் அவரது சகோதரர்கள் அவரது உடலை எரித்துவிட்டனர்.
கேரள சமூக செயற்பாட்டாளர் கமல்ஸி இஸ்லாத்தை தழுவினார்! கேரள சமூக செயற்பாட்டாளர் கமல்ஸி இஸ்லாத்தை தழுவினார்! Reviewed by NEWS on October 04, 2018 Rating: 5