ஹலால் பன்றி கறி விவகாரம்!

கண்டி ஈல்ஸ் சிஜென்சி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பன்றி இறைச்சிக்கு ஹலால் என பொறிக்கப்பட்டு பரிமாறப்பட்டதாக ஒரு புகைப்படம் வைரலாக சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர். இது தொடர்பாக கண்டி பீஸ் மிஷன் அங்கத்தவர்கள் ஆக்கபூர்வமான ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர் ஷேக் அகார் முஹம்மத் அவர்களின் வழிகாட்டலில் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் கீழ் கண்டி பீஸ் மிஷன், கண்டி மஸ்ஜித்கள் சம்மேளனம், கண்டி வர்த்தக சங்கம், கண்டி சிற்றி ஜம்இய்யத்துல் உலமா போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து குறித்த ஹோட்டலின் கண்டி வதிவிட முகாமையாளரை நேரில் சந்தித்து விளக்கம் கோறியது. மட்டுமல்லாமல் இது ஒரு பாரதூரமான செயற்பாடு என்றும், முஸ்லிம் மக்களின் உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது என்றும் குறித்த குழு சுட்டிக் காட்டியது.


தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முகாமையாளர்,

உண்மையில் இது தவறுதலாக நடந்த ஒரு நிகழ்வாகும். இதற்காக நாம் மிக மிக வருந்துகிறோம். இதற்கு மேல் இப்படியாக நடைபெற மாட்டாது எனவும் அதன் முகாமையாளர் தெரிவித்தார். அத்துடன் எமது அதிக வாடிக்கையாளர்கள் இலங்கை முஸ்லிம்கள் மட்டுமில்லாது மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் வருகை தருபவர்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலைமையிலே தான் இத துரதிஷ்டவசமாக இது நடைபெற்று விட்டது எனவும் தெரிவித்ததார். கூட்ட இறுதியில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. ( தவறு என்று ஏற்றுக் கொண்டது பன்றிக் கறி விற்பனையை அல்ல! ஹலால் என்று குறிப்பிட்டதைத் தான். மற்றப் படிக்கு அங்கு அதுவும் ஒரு ஸ்பெஷல் டிஸ் தான்! எது எப்படியோ தூய்மையைத் தேடி தூய்மையான இடத்திற்கே முஸ்லிம்கள் செல்வர்)


-ஹைதர் அலி
ஹலால் பன்றி கறி விவகாரம்! ஹலால் பன்றி கறி விவகாரம்! Reviewed by NEWS on October 12, 2018 Rating: 5