தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Oct 3, 2018

அமைச்சராகிறார் ரவி கருணாநயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் பரிந்துரையை பொறுத்தே அவருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் தலைமை நேற்று மாலை அந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த விடயத்தை கட்சியின் தலைமைக்கு உறுதியுடன் வலியுறுத்தியுள்ளனர் நேற்று மாலை இடம்பெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றின் போது அரசியல் விடயங்கள் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன இதேவேளை ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அல்லது அவர் மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஹரின் பெர்ணான்டோ நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages