ஜனாதிபதி கொலை விவகாரம் : சீனாவின் உதவியை நாடும் இலங்கை பொலிஸ்

மைத்ரிபால சிறிசேன கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் பொலிஸ் உளவாளி நாமல் குமாரவின் கைத் தொலைபேசியில் அழிந்து போன தகவல்களை மீட்பதற்கு சீன நிறுவனத்தின் உதவியை நாட நீதிமன்ற அனுமதி பெற்றுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

நாமல் குமாரவின் கைத் தொலைபேசியில் அழிந்து போனதாகக் கூறப்படும் பல தகவல்கள் இவ்விவகாரத்தில் முக்கிய சான்றுகளாக அமையலாம் என நம்பப்படுகிறது.

இவ்விகாரத்தின் பின்னணியில் முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வா தொடர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டு எதுவும் பொலிசார் பதிவு செய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்