ரந்தொலுவ- வீடமைப்பு தொகுதி விளையாட்டரங்கில், துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய, சந்​தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (10), வெளிநாட்டு தயாரிப்பிலான ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Share The News

Post A Comment: