கொழும்பு குப்பைக்கு புத்தளத்தில் இடமில்லை - நகர சபை உறுப்பினர்கள் தீர்மானம்

புத்தளம் நகரை நோக்கி வர இருக்கும்  எதிராக புத்தளம் நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

இன்று நடை பெற்ற புத்தளம் நகர சபையின் தலைவர் கே ஏ பாயிஸ் அவர்களின் தலைமையில் கூடிய மாதாந்த கூட்டத்தொடரில் புத்தளத்திற்கு_கொண்டுவர_இருக்கும்_கொழும்பு_குப்பைக்கு_எதிராகவும்_எமது_அழகிய_புத்தளத்தை இலங்கையின் குப்பை தொட்டியாக்கும் நல்லாட்ச்சி அரசின் இத்திட்டத்திற்கு எதிரான தீர்மாணம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் உருப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் உருப்பினர்கள், மொட்டு கட்சியின் உருப்பினர்கள், இன்னும் விஷேடமாக ஐக்கிய தேசிய கட்சியின் உருப்பினர்களின் முழு ஆதரவுடன் கட்சி பேதமின்றி, அரசியல் இலாபங்கள் இன்றி ஊருக்காய் ஒன்று பட்டு இன்று இத் தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.

இன்னும் 6து நாளாக புத்தளத்தின் இளைஞர்களினால் தொடரும் இந்த சத்தியாக்கிரக போராட்டம் தற்போது சூடுபிடித்திருக்கும் நிலையில் இந்த நல்லாட்ச்சி அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்றும் புத்தளம் நகர சபை தலைவர் கே ஏ பாயிஸ் அவர்கள் சபையில் விஷேட வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்....
கொழும்பு குப்பைக்கு புத்தளத்தில் இடமில்லை - நகர சபை உறுப்பினர்கள் தீர்மானம் கொழும்பு குப்பைக்கு புத்தளத்தில் இடமில்லை - நகர சபை உறுப்பினர்கள் தீர்மானம் Reviewed by NEWS on October 04, 2018 Rating: 5