இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தினரால் தில்லையடி அரபுக்கல்லூரிக்கு குடிநீர் வசதி!

NEWS
0 minute read
0

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இளம் முஸ்லிம் பெண்கள் சங்கத்தினரால் (YWMA) புத்தளம், தில்லையடி அல் /அஸ்மா அரபுக்கல்லூரியில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

இளம் முஸ்லிம் பெண்கள் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (02) இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், அல்/அஸ்மா அரபுக்கல்லூரியில் கல்வி கற்கும் பெண் மாணவர்களுக்கான விழிப்புணர்வு விரிவுரைகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அகில இலங்கை பெண்கள் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா, வை.எம்.எம்.ஏ அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் பாருக் மற்றும் வை.எம்.எம்.ஏ அமைப்பின் புத்தள மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

To Top