காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதமாகிய அக்டோபர் மாதத்தை அனுஷ்டித்து வரும் காத்தான்குடி பொது நூலகம் முதியோர்களை கெளரவிக்கும் வகையில் நூலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு காத்தான்குடி முதியோர் இல்லத்தில் 8.10.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியர்வர்களுக்கு அதிதிகளால் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
காத்தான்குடி பொது நூலக நூலகர் ILM.நசீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலக உதவியாளர் SLM. முபாரக் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், நூலக நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது..


எம்.பஹ்த் ஜுனைட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...