நியூயோர்க் டைம்ஸ் தொடர்பில் சீ.ஐ.டி விசாரணை

சைனா ஹாபர் நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது  7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி இருந்த செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுவரும்  விசாரணைக்கு அமைவாக இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பின் தலைவரிடம் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சைனா ஹாபர் நிறுவனத்தால் 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடகவியலாளர் மரியா அபி ஹபியினால் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி அது தொடர்பில் அறிக்கை இடப்பெற்றிருந்தது. 
இந்த அறிக்கை தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பு கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.
குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைத்ததன் பிரகாரம் குற்றப்புலனாய் விசாரணை அதிகாரிகளினால் அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த விசாரணைக்களுக்கு அமைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவும் அதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சாட்சிகள் தொடர்பில் விசாரிப்பதற்கும் இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பின் தலைவர் சதுரங்கத அல்விஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன் பிரகாரம் அவர் நேற்று காலை 9.30 மணி முதல் 11.40 மணிவரை சுமார் இரண்டரை மணித்தியாலம் தங்கியிருந்து வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூயோர்க் டைம்ஸ் தொடர்பில் சீ.ஐ.டி விசாரணை நியூயோர்க் டைம்ஸ் தொடர்பில்  சீ.ஐ.டி விசாரணை Reviewed by NEWS on October 04, 2018 Rating: 5