ஹொரவ்பொதானையில் "தூரிகையின் தூரல்கள்" எனும் மாபெரும் கலைக் கண்காட்சி

உலக உள நல தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை உள நல வார்த்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கமைய ஹொரவ்பொதானை முஸ்லிம் மஹா வித்தியாலயதின் ஆலோசனை வழிகாட்டல் சேவை பிரிவு மற்றும் சித்திரப் பிரிவு பேன்றவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட "தூரிகையின் தூரல்கள்" எனும் மாபெரும் கலைக் கண்காட்சி இன்று ஆரம்பமானது.

பாடசாலையில் அதிபர் ஜனாப் அப்துல் சத்தார்  தலைமையில் ஆரம்பமான இக் கண்காட்சியை பிரதம அதிதியாக வருகை தந்த  கொபிதிகொாள்ளாவ வலயக் கல்வி பணிமனையின் பணிப்பாளர்  M.A பியரத்ன தனது கரங்களால் அங்குரார்பணம் செய்து  வைத்தார்.மேலும் இந் நிகழ்வுக்கு விசேட அதிதியாக வட மத்திய மாகாண உதவிப் பதிப்பாளர் (சித்திரம்) M.A கருணாசேன வருகை தந்திருந்தார், இவர்களோடு ஏனைய அதிதிகளாக கொபிதிகொாள்ளாவ வலயக் கல்வி பணிமனையின் தமிழ் பிரிவு உதவிப் பதிப்பாளர் S. பிரியறதினி, கொபிதிகொாள்ளாவ வலயக் கல்வி பணிமனையின் அபிவிருத்தி மற்றும் ஆலோசனை வழிகாட்டல் விடய உதவிப் பதிப்பாளர் D. சம்பத் திஸானாயக ஆகியோர் வருகை தந்திருந்தனர். மேலும் இக் கண்காட்சியின் அங்குரார்பண நிகழ்வுக்கு ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினரும்  வருகை தந்திருந்தனர். 

இக் கண்காட்சியில் பாடசாலையின் மாணவர்களால் வரைப்பட்ட பல ஏராளமான சித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதை வருகை தந்திருந்தார் அதிதிகள், பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலதர ப்பட்டவர்கள் இன்று பார்வையிட்டனர்.

இன்று ஆரம்பமான இந்த மாபெரும் கண்காட்சியானது ஹொரவ்பொதானை பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களும்  பார்வையிடுவதற்காக நாளை(17) தினமும் இடம்பெற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஹம்மட் ஹாசில்.
ஹொரவ்பொதானையில் "தூரிகையின் தூரல்கள்" எனும் மாபெரும் கலைக் கண்காட்சி ஹொரவ்பொதானையில் "தூரிகையின் தூரல்கள்" எனும் மாபெரும் கலைக் கண்காட்சி Reviewed by NEWS on October 17, 2018 Rating: 5