உயருகிறது நீர் கட்டணம் - நல்லாட்சியின் அடுத்த சாதனை!

நீர் கட்டணம் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 வருடத்துக்கு ஒரு தடவை  நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டிய நிலையில், கடந்த 6 வருடங்களாக நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் முன்னெடுக்கப்படவில்லையென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து ஆராயவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவில் நீர் வழங்கல் அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவால் தயாரிக்கப்படும் அறிக்கை எதிர்வரும் வாரங்களில் தம்மிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...