அமைச்சரவையில் நடந்தது என்ன?

நான்:- அமைச்சரே!

அமைச்சர் :- சொல்லுங்கள்கள் சித்தீக். 
எப்படி சுகமா?


நான்:- ஆம் நான் சுகம்.நீங்கள் சுகமா?


அமைச்சர்: - சுகமாக உள்ளேன். நீங்கள் கோல் பண்ணிய போது நான் கூட்டம் ஒன்றிலிருந்தேன். பேச முடியவில்லை. என்ன விடயம் சித்தீக்?

நான்:- நீங்கள் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள், கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சில் 800 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கியதாக கூறினாரா?

அமைச்சர்:- பச்சைப் பொய் அவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறவே இல்லை.

நான்:- அவ்வாறாயின் நடந்தவற்றைக் கூற முடியுமா?

அமைச்சர்:- குறித்த அமைச்சரவையில் நீர்வழங்கல் அமைச்சு விவகாரம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இந்த அமைச்சு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல விடயங்களைக் கூறிக் கொண்டிருந்தார்.

இதன் போது நீர்வழங்கல் அமைச்சில் தொடர்ச்சியாக தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்துப் பேசப்பட்டது. அப்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் குறுக்கிட்டு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தொழில் எதுவும் தனது அமைச்சில் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். ஆரம்பத்தில் சுமார் ---- பேருக்கு தொழில் வழங்கப்பட்டது. பின்னர் எந்த நியமனமும் வழங்கவில்லை என்றும் கூறினார். அப்போது அமைச்சர்கள் சிலர் சிரித்துக் கொண்டனர். அத்துடன் அங்கிருந்த அமைச்சர்களில் சிலர் முஸ்லிம்களுக்கு அதிகளவில் தொழில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

நான்:- இதன்போது கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் இணைந்தா இவ்வாறான கருத்தை முன்வைத்தார்.

அமைச்சர்:- நோ.. நோ.. இல்லை.. இல்லை..அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவ்வாறு சொல்லவில்லை. அப்படி அவரால் கூறவும் முடியாது அல்லவா? அது அப்பட்டமான பொய். அவ்வாறுதான் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கியிருந்தாலும் அதனை அமைச்சர் கௌரவ ரிஷாத் எவ்வாறு சுட்டிக் காட்ட முடியும்.

சிறுபான்மை இன அமைச்சர் ஒருவரால் அவர் சார்ந்த சமூகத்துக்கு கிடைக்கக் கூடிய தொழில்வாய்ப்புகளை அதே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர் தடுப்பாரா? இது முற்று முழுதான பொய். அமைச்சர் ரிஷாத் அப்படிச் சொல்லவே இல்லை. ஆனால், இவர்கள் இருவரும் வேறு பல விடயங்களில் அமைச்சரவையில் அடிக்கடி முரண்பட்டுக் கொள்வர்தான்.

நான்:- நன்றி அமைச்சரே!

(குறித்த அமைச்சர் என்னிடம் தெரிவித்ததற்கான குரல்வழி ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால், அதனை வெளியிட முடியாமைக்கு மனம் வருந்துகிறேன். மேலும், குறித்த அமைச்சர் என்னிடம் தெரிவித்தவற்றில் எங்கேனும் எதனையேனும் நான் திரிவுபடுத்தி அல்லது இட்டுக்கட்டி, மிகைப்படுத்தி எழுதியிருப்பேன் என்றால் அதற்கான மிகக் கொடூரமான தண்டனையை இறைவன் எனக்கு வழங்கட்டும்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்