முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இன்று (25) அவர் ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரை இன்று இரவே கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கைது!
October 25, 20180 minute read
Tags