பிரதமரின் நிகழ்விலிருந்து இடை நடுவில் வெளியேறிய ஜனாதிபதி!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றி கொண்டிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுந்து சென்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு ஒன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உரையாற்றவிருந்தது. எனினும் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரதான மேடையில் ஏறவில்லை. எனினும் ஜனாதிபதி அவசர தேவையின் நிமித்தம் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமையினால் மன்னிப்பு கோரிய அறிவிப்பாளர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி அங்கிருந்து சென்றுள்ளார். இதன்போது தான் வெளியேறுவதாக ஜனாதிபதி, பிரதமருக்கு சமிக்ஞை காட்டி விட்டு சென்றுள்ளார்.
பிரதமரின் நிகழ்விலிருந்து இடை நடுவில் வெளியேறிய ஜனாதிபதி! பிரதமரின் நிகழ்விலிருந்து இடை நடுவில் வெளியேறிய ஜனாதிபதி! Reviewed by NEWS on October 12, 2018 Rating: 5