ஜனாதிபதியின் மன்னார் விஜயத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னார் விஜயத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேசிய சுற்றாடல் தின நிகழ்வு எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகமும், ஜனாதிபதி செயலகமும் இணைந்து இந்த நிகழ்விற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு நேற்றுமன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...