Oct 22, 2018

”நாலக சில்வாவை விசாரித்தால், முஸ்லிம் தாக்குதலின் பின்புலம் தெரியவரும்” நாமல் ராஜபக்‌ஷ

DIG நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால் திகன கலவரத்தின்சூத்திரதாரி வெளியே வருவார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுஉரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கூட்டு எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளைவிசாரணை செய்யும் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி மற்றும்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி தொடர்பில் திட்டமிட்டதாககூறப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர்நாலக சில்வா தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில்அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகிறது.

தன்னை கொலை செய்ய சதி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும்விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதுவரை தனக்குஅறிக்கப்படவில்லை என ஜனாதிபதியே குறைப்படும் அளவுக்கு இன்று நிலமைஇருக்கிறது.நாலக சில்வாவை விசாரணை செய்யும் விதத்தில் இருந்தே இதன்பின்னனியில் பெரிய தலைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

நாமல் குமார என்பவர் வெளியிடும் தகவல்களை பார்க்கும் போது இந்தசதித்திட்டங்களின் பின்னால் இருப்பவர்கள் ஜனாதிபதியை மாத்திரம் கொலைசெய்ய திட்டமிடவில்லை என்பதும் இன்னும் பல்வேறு சதி திட்டங்களைமுன்னெடுத்துள்ளார் என்பதும் புலனாகிறது.நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரங்களை உருவாக்க எல் டி டிடயஸ்போரா பணம் வழங்கியுள்ளமை மற்றும் அவர்களுடன் தீவிரவாத தடுப்புபிரிவு தொடர்பு பட்டுள்ளமை என்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

அன்று சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க சதி செய்த அதேபின்னனிதான் இந்த முழு திட்டங்களினதும் பின்னால் இருக்க வேண்டும்.அன்று அலுத்கமையில் அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட கலவரம் தொடர்பில் நாம்பலமுறை கோரியும் விசாரணை மேற்கொள்ளாத இந்த அரசாங்கத்தின்பங்காளிகளே மிக அண்மையில் நடந்த இனமோதல்களின் பின்னால்இருந்திருக்க வேண்டும்.

தற்போது மந்த கதியில் முன்னெடுக்கும் விசாரணைகளை முறையாகமேற்கொண்டால் திகன கலவரத்தின் பின்னால் இருக்கும் பிரதானசூத்திரதாரிகளை இனங்கண்டு கொள்ளமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network