அபூ ஹுதைஃபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கற்று பிரச்சாரம் செய்யும் ஆலீம்களை உருவாக்கும் நோக்கில் அநுராதபுரம், கொபிதிகொாள்ளாவயில் வேரூன்றி நிற்கின்ற அறபுக் கலாபீடம் அபூ ஹுதைஃபா கல்லூரிக்கு 2019 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

குர்ஆன் மனனம் (ஹிப்ளு), மற்றும் ஷரிஆ (கிதாபு), ஆகிய இரு பிரிவுகளை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளது.

குர்ஆன் மனனம் பிரிவிற்கான தகமைகளாக நல்லொழுக்கமுடையவராகவும் தேகாரோக்கியமுடையவராகவும் அல்குர்ஆனை நன்கு  ஒதத்தெரிந்தவராகவும் இருப்பதோடு, 2019 ஆம் ஆண்டில் 6 தரத்திற்கு  சித்தியடைந்தவராக இருத்தல் வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஷரீஆ(கிதாபு) பிரிவிற்கு  நல்லொழுக்கமுடையவராகவும் தேகாரோக்கியமுடையவராகவும் அல்குர்ஆனை நன்கு  ஒதத்தெரிந்தவராகவும் இருப்பதோடு, 2019 ஆம் ஆண்டில் 8 தரத்திற்கு  சித்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்  எனவும் கோரப்பட்டுள்ளது.

பெயரும் விலாசமும் தகைமையும்  கொண்ட சுயமாக தயாரிக்கப்பட்ட  விண்ணப்பங்களை 2018-12-15ஆம் திகதிக்கு முன்னர் Principal, Aboo Huthaifa Arabic College, Hijrapura, Ellawewa, Kabithigollewa. எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0774034284 மற்றும் 0767070134 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முஹம்மட் ஹாசில்.
அபூ ஹுதைஃபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் அபூ ஹுதைஃபா  அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் Reviewed by Ceylon Muslim on October 25, 2018 Rating: 5