சபாநாயகருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு; பாராளுமன்றம் 7 ஆம் திகதி

கட்சித்தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை அலரிமாளிகையில் முன்னெடுத்து வருகின்றனர்.
உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டடுமாறு கட்சித்தலைவர் சபாநாயகரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தால் இன்று வெளியாகுமென தான் நம்புவதாக சபாநயாகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, அவ்வாறு 7 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டுவதாக இருந்தால் சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது.
சபாநாயகருடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், திகாம்பரம், ஐக்கியதேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஜே.வி.பி. யின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரிமாளிகையில் கூடி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது  செய்தியாளர் தெரிவித்தார்.

சபாநாயகருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு; பாராளுமன்றம் 7 ஆம் திகதி சபாநாயகருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு; பாராளுமன்றம் 7 ஆம் திகதி Reviewed by Ceylon Muslim on November 02, 2018 Rating: 5