மகிந்தவை மீண்டும் விரட்டுவோம் -கண்டி UNP பேரணியில் ஹக்கீம் சூளுரைசிறுபான்மையின சமூகங்களை அடக்கி அச்சுறுத்தி அடிமைப்படுத்தி வைத்திருந்த ராஜபக்ச தரப்புடன் கூட்டணி அமைத்து மீண்டும் நாட்டில் தமிழ் முஸ்லீம் சமூகங்களை அடக்கி ஆள ஒருபோதும் அனுமதியோம் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் ரவூப் ஹக்கீம் சூளுரைத்துள்ளார்.

கண்டியில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்,....

பிழையான சட்ட ஆலோசனைகளை நம்பி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் தவறுகளுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்.பொதுத் தேர்தல் அல்ல, எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க நாம் தாயார். ஆனால் அதனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, அந்த தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

அதனாலேயே அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியில் மக்களை இணைத்துக்கொண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம்.

இந்தப் போராட்டம் சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் மைத்திரிபால சிறிசேனவை வீட்டிற்கு விரட்டி அடிக்கும் வரை அதேபோல் மெதமுலனவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மெதமுலனவிற்கு அனுப்பி வைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...