ஐ தே க வின் வாகன பேரணி

பாரா­ளு­மன்றில் பெரும்­பான்­மையை காட்­டாது அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மான முறையில் செயற்­பட்டு வரும் ஜனா­தி­பதிக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்­றைய தினம் எதிர்ப்பு வாகனப் பேர­ணி­யொன்றை  ஐக்­கிய தேசிய கட்சி கொழும்பில் நடத்­தி­யது.
கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு முன்­பா­க­வி­ருந்து நேற்­றைய தினம் மதியம் இரண்டு மணி­ய­ளவில் ஆரம்­பித்த இவ்­வெ­திர்ப்பு பேரணி மாலை நான்கு மணி­ய­ளவில் சுதந்­திர சதுக்­கத்தில் நிறு­வப்­பட்­டுள்ள டி.எஸ். சேனா­நா­யக்­கவின் சிலைக்கு மலர் மாலை அணி­விப்­ப­துடன்  நிறை­வுக்கு வந்­தது. 
ஐ.தே.கவின் செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வ­சத்தின் தலை­மையின் கீழ் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இப்­பே­ர­ணியில்  பாரா­ளு­மன்றில் ஐக்­கிய தேசிய கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்துப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். நூற்­றுக்­க­ணக்­காண வாகன அணி­வ­குப்­புடன் காலி­மு­கத்­தி­ட­லி­லி­ருந்து புறப்­பட்டு கொள்­ளுப்­பிட்டி சுற்­று­வட்­டா­ரத்தை கடந்து அலரி மாளி­கை­ய­ருகில் பய­ணித்­தது.
ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைய­சைப்பு
இப்­பே­ர­ணி­யா­னது அலரி மாளி­கை­யி­னூ­டாக பய­ணிக்­கையில் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலரி மாளி­கை­யினுள் இருந்­த­வாறு பேர­ணிக்­கா­ரர்­களை நோக்கி கைய­சைத்த வண்­ண­மி­ருந்தார். இதனை அவ­தா­னித்த பேரணிக்காரர்கள் தமது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்ட தலைவர் அவரே, மக்­களின் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே, தமது தலை­வரை காப்­ப­தோடு ஜனா­நா­ய­கத்தை நிலைநிறுத்­தவே இப்­போ­ராட்டம் என  கோஷ­மிட்­டனர்.
கோஷங்­களும், பதா­தை­களும்
இத­னை­ய­டுத்து அவ்­வி­டத்­தி­லி­ருந்து மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்ட பேரணி நேராக சுதந்­திர சதுக்­கத்தை நோக்கி வந்­தது. இதன்­போது வீதி முழு­வதும் பேர­ணிக்­கா­ரர்கள் வாக­னத்­தி­லி­ருந்து ஒலி எழுப்­பி­ய­வாறும், சிறு­வர்­களின் விளை­யாட்டு பொரு­ளான ஒலி­யெ­ழுப்பும் கரு­வி­களை கொண்டு பேரணி பய­ணித்த வீதி முழு­வதும் ஒலி எழுப்­பி­ய­வாறு வருகை தந்­தி­ருந்­தனர்.
பேர­ணிக்­காக பய­ணித்த வாக­னங்­களில் ஜன­நா­யக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே, அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே, ஐ.தே.க. ஜன­நா­ய­கத்­தினை நிலை­நாட்டும் கட்சி, பின்­க­த­வினால் வந்த பிர­தமர் பின்­க­த­வி­னா­லேயே வெளி­யேற வேண்டும், பாரா­ளு­மன்றை கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­தி­யிடம் இல்லை, பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை ஐ.தே.க. வசமே என்ற பதா­தை­களை ஒட்­டி­யி­ருந்­தனர்.
மேலும் பேர­ணிக்­கா­ரர்­களில் சிலர் மீண்டும் அப்பம் சாபிட்ட ஜனா­தி­பதி வரு­கவே என ஜனா­தி­ப­தியை விமர்­சித்த வண்­ண­மி­ருந்­தனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உரு­வப்­ப­டத்­திற்கு அப்ப மாலை அணி­வித்­தி­ருந்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.  அதா­வது,  ஜனா­தி­ப­தியின் உரு­வப்­ப­ட­மா­னது  பேர­ணியில்  கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்கு அப்பம் வழங்­கு­வது போன்று   வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.
சர்­வா­தி­கார ஜனா­தி­பதி முறையை அழித்து ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்ட ஆட்சி கதி­ரையில் அமர்த்­தப்­பட்ட ஜனா­தி­பதி மக்கள் வரத்தை எட்டி உதைத்­துள்ளார். இதனை நாட்டு மக்­க­ளா­கிய நாம் எதிர்க்­கின்றோம். 62 லட்சம் பேரின் வாக்­கு­களை விற்கும் அதி­கா­ரத்தை ஜனா­தி­ப­திக்கு யார் வழங்­கி­யது. இவ்­வா­றா­ன­தொரு ஜனா­தி­பதி எமக்குத் தேவை­யில்லை எனவும் பேர­ணிக்­கா­ரர்கள் கோஷ­மெ­ழுப்­பினர்.
டி.எஸ். சேன­நா­யக்க சிலைக்கு
மாலை அணி­விப்பு
காலி­மு­கத்­தி­ட­லி­ருந்து பேர­ணி­யாக வந்­தி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மரிக்கார், ஜய­விக்­ரம பெரேரா, வஜிர அபே­கு­ண­வர்­தன, அசோக அபே­சிங்க சுதந்­திர சதுக்­கத்தில் காணப்­படும் டி.எஸ்.சேனா­நா­யக்­கவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணி­வித்­தனர்.
கொழும்பு நக­ரமே ஸ்தம்­பிதம் 
ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த எதிர்ப்பு வாகன பேர­ணி­யின்­போது ஜனா­தி­பதி செய­ல­கத்தின் முன்­பாக நீர்த்தாரை வாகனமும், கலகமடக்கும் பொலிஸாரும் மற்றும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணி ஆரம்பிக்கப்பட்டதும் காலிமுகத் திடலுக்காக கோட்டைக்கு வரும் வீதி முற்றாக மூடப்பட்டதுடன், கொழும்பு நகரின் பிரதான வீதிகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்து போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. குறித்த போராட்ட பேரணி பாராளுமன்றை நோக்கிப் பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

-Vidivelli
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்